இன்று முதல் விவசாயம், மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்களுக்கு அனுமதி.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் ஊரடங்கு மே -03-ம் தேதி வரை மேலும் நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.இதையெடுத்து மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிக்காட்டி நெறிமுறைகளில் முன்பை விட வருகின்ற 20 -ம் தேதி (அதாவது இன்று) சில தொழில்களை இயங்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக சில தொழில்களை இயங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதில், பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, டாக்சிகள் ஓடாது திரையரங்குகள், மால்கள், பூங்காக்கள், மத வழிபாடுகள் போன்றவற்றிக்கு தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைவான உள்ள பகுதிகளில் குறைந்த நபர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரியர், மின்பழுது பார்ப்பவர், தச்சர், சாலை கட்டுமான பணியாளர் போன்றவர்களுக்கு பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளை தொடர நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கட்டுமானம் நடைபெறும் இடங்களில் தற்போது தங்கியிருக்கும் தொழிலாளர்களை கொண்டு பணிகளில் ஈடுபடலாம். ஆனால் புதிதாக வெளியூர்களிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் அழைத்து வேலையில் ஈடுபடுத்தக்கூடாது.
விவசாயத்திற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அறுவடை, சந்தைப்படுத்துதல், மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. ஐ.டி நிறுவனங்களில் 50 % ஊழியர்கள் கொண்டு வேலை செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
மீன்பிடித்தொழில், மீன் சந்தை இயங்க அனுமதி.தினக்கூலி தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே வேலை செய்யலாம், வேறு மாநிலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்து ஊரடங்கு தளர்வுவை அமல்படுத்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…