கர்நாடகத்தில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு ..!
கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் மாநிலங்கள் தோறும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 10 ஆம் தேதி அறிவித்த ஊரடங்கை ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டித்தது. இந்நிலையில், ஊரடங்கு குறித்து இன்று முதல்வர் எடியூரப்பா மற்றும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு இந்த கூட்டத்தில் ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டிப்பதாக முடிவெடுத்துள்ளனர். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ சேவைகளுக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் தற்போது 26,35,122 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.