மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு..!
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இருபிரிவினரிடையே மோதல் வெடித்ததை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், துணை ராணுவப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஷில்லாங்கில் பேருந்து நடத்துனர் ஒருவர், 3 பேரை தாக்கியதாக எழுந்த புகார், இருதரப்பிடையே மோதலாக வெடித்தது. இதையடுத்து, கடைகள், வீடுகளுக்கு தீவைத்த கும்பல், அரசுப் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதலும் நடத்தியது. ஒரு சில இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சும் நடைபெற்றது.
இதையடுத்து, இணையதள சேவை, செல்போனில் குறுஞ்செய்தி சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள துணை ராணுவப் படையினர், முக்கிய வீதிகளின் வழியே கொடி அணிவகுப்பையும் நடத்தினர். இதனிடையே, ஷில்லாங்குக்கு சுற்றுலாச் சென்ற 500க்கும் மேற்பட்டோர், ராணுவ முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.