ஆந்திரப்பிரதேசத்தில் ஜூன் 20 வரை ஊரடங்கு..!
- ஆந்திரப்பிரதேசத்தில் ஜூன் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு.
- ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை அறிவித்திருந்தார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போது, இரண்டாம் அலை கட்டுக்குள் வராத நிலையால் அம்மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்து உள்ளனர். இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்னும் 3 நாட்களில் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், ஜூன் 20 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும், புதிய வழிகாட்டுதலின் படி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் இயங்க அனுமதியளித்துள்ளது அம்மாநில அரசு.
அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஜூன் 10 தேதி முதல் அமல்படுத்தவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.