தினசரி பாதிப்பு 20,000-ஐ தாண்டினால் ஊரடங்கு – மேயர் எச்சரிக்கை..!
மும்பையில் தினசரி பாதிப்பு 20,000 ஐத் தாண்டினால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருவதாக கூறினார். கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 20,000 ஐத் தாண்டினால், மும்பையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்தார். மக்கள் கூட்டம் கூட்டக்கூடாது மற்றும் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
யாரும் ஊரடங்கை விரும்பவில்லை, ஆனால் அதற்காக மக்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும். மும்பையில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 20 சதவீதத்திற்கு மேல் கொரோனா நோயாளிகள் இருந்தால், கட்டிடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மும்பையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 6,100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது என கூறினார். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று 8,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 31 வரை பள்ளிகள் மூடப்படும்:
கொரோனா தொற்று காரணமாக மும்பையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.