மே 17 வரை ஊரடங்கு : சிவப்பு மண்டலங்களின் கட்டுப்பாடு நெறிமுறைகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நிறைவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சிவப்பு, ஆரஞ்சி, பச்சை என 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் சிவப்பு மண்டல பகுதிகளுக்கு கட்டுப்பாடு நெறிமுறைகள் :

  • அடுத்த 21 நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.
  • ஷாப்பிங் மால்ஸ், ஓட்டல்கள், தியேட்டர்கள், உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை.
  • மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும். சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை தொடரும்.
  • மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.
  • சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.
  • 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.
  • நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி.
  • அத்தியாவசிய தேவையின்றி இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது.
  • மேலும் சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…

3 mins ago

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…

35 mins ago

குடை முக்கியம்!! இந்த 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

சாமியே சரணம் ஐயப்பா!! மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…

2 hours ago

உத்தரப்பிரதேசம்: மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து – 10 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…

2 hours ago

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

9 hours ago