ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி உரையின் முக்கிய 10 அம்சங்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். அதில், இங்கு முக்கிய 10 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்களை பற்றி காண்போம்.

  • ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
  • உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
  • உலகிற்கே இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  • உலக நாடுகளுக்கு இந்திய மருந்துகளே கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது.
  • நம்நாட்டில் கொரோனா பாதிப்பை சமாளிக்க உள்நாட்டு தொழில்துறையே கைகொடுத்திருக்கிறது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 4வது கட்ட ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கொரோனாவுக்கு பின் உலகை இந்தியா முன்னின்று வழிநடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
  • இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த கொரோனா வைரஸ் தந்துள்ளது. உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.
  • யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

5 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

6 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

7 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

8 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

8 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

8 hours ago