மேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! – மம்தா பானர்ஜி
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பார்ஜி ஜூலை 1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு.
- ஜூலை 1 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. நாளையுடன் இந்த ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பார்னஜி ஜூலை 1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜூலை 1 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து அரசு அலுவலகங்களுக்கு 20% பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.