தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் மேலும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டத்தில் உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் மாலை 6 மணிக்கு முன்னதாகவே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட வேண்டும்.
மேலும் ஊரடங்கை மீறி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே தெலுங்கானாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1096 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் 49,391 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,694 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49,391 பேரில் 14,183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …