மஹாராஷ்டிராவில் மேலும் 15 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு..?
மகாராஷ்டிராவில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இரவு 8 மணி முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அந்த ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து விவாதிக்க மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கொரோனா தொற்று, தடுப்பூசி மற்றும் ஊரடங்கு கீழ் விதிக்கப்பட்ட தடுப்பு விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார். இறுதி முடிவு ஏப்ரல் 30 க்குள் அறிவிக்கப்படும் என்று டோப் கூறினார்.