உத்திரப்பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு, அதாவது மே 6 காலை 7 மணி வரை நீட்டித்து, உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்திலும் தினமும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை 12 லட்சத்து 80 இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தினமும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 4-ஆம் தேதி காலை 7 மணி உடன் முடிவடைகிறது. ஆனால் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டே செல்வதால் மீண்டும் இந்த உத்தரவு இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 6ஆம் தேதி காலை 7 மணி வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவசரமான தேவைகள் இருப்பவர்கள் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…