பீகாரில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பொதுமுடக்கமா..?

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தற்போது வரை 1.66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பீகார் மாநிலத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்டுள்ள ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் 01-ஆம் தேதி முதல் 16 நாட்களுக்கு அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு திரும்பப் பெறபட்டதாகவும், பீகாரில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யும் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.