மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்றிரவு வெளியீடு என அறிவிப்பு.
CUET – UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஆறு கட்டங்களில் கடந்த ஜுலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி இத்தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை (Provisional Answer Keys) தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. நாடும் முழுவதும் சுமார் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்பட இருக்கின்றன. CUET – UG தேர்வு முடிவுகள் வெளியானதும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…