வெளியானது CUET தேர்வு முடிவுகள் ..! எப்படி பார்ப்பது?
CUET தேர்வு முடிவுகள் : கடந்த 2022ம் ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்காக சேர்க்கைக்கு இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது. அதே போல இந்த நடப்பாண்டுக்கான CUET தேர்வானது கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது.
முதல் முறையாக எழுத்து தேர்வு முறையிலும், கணினி தேர்வு முறையிலும் என 2 முறையில் இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வுகளை எழுதினார்கள். மேலும், 1000-திற்கும் அதிகமான மாணவர்கள் ஒருசில நேர்மையான காரணங்களால் அந்த தேர்வை தவறவிட்டனர்.
அவர்களுக்கு மே-19 ம் தேதி அன்று மறுதேர்வானது நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து CUET தேர்வின் முடிவுகள் இந்த மாதம் (ஜூலை) 25 முதல் 30 தேதிக்குள் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று (ஜூலை-28) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மாணவர் மற்றும் மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.