கர்நாடகா தேர்தல் நிலவரம் : தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவு.!

சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் பின்னடவை சந்தித்து வருகிறார்.
கர்நாடக தேர்தல் மின்னணு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 224 சட்டமன்ற தொகுதிக்கும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
ஆளும் பாஜக தொடக்கத்தில் முன்னிலை வகித்தாலும் தற்போது 80 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இதில் சில முக்கிய பாஜக தலைவர்கள் கூட பின்னடைவை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் பின்னடவை சந்தித்து வருகிறார்.அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தம்மையா முன்னிலை வகித்து வருகிறார்.