கணவருடன் ஒத்துப் போகாததால் சுமூகமாக பேசி பிரிந்து, வேறு ஆணுடன் வாழ்ந்து வந்த பழங்குடியின பெண்ணை முன்னாள் கணவரின் உறவினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ள வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணா எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பழங்குடியின தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து இருக்கிறார்கள். அதன்பின்பு அந்த பழங்குடியின பெண் தனக்கு பிடித்த மற்றொரு ஆணை திருமணம் செய்துகொண்டு வேறொரு கிராமத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேறு ஆணுடன் நிம்மதியாக வாழ்வதை பொறுக்க முடியாத முன்னாள் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்யக்கூடிய வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கணவரின் உறவினர் ஒருவரை நீண்ட தூரம் சுமந்து செல்லுமாறும் கீழே விட்டால் அடிப்போம் என்றும், பின்னால் வருபவர்கள் கைகளில் மட்டையுடன் சிரித்துக் கொண்டே செல்லும் காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு நடந்துகொள்ளும் முன்னாள் கணவரின் உறவினர்கள் மற்றும் கணவருக்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேபோல ஏற்கனவே கடந்த ஜூலை மாதமும் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தில் இதுபோன்று கொடுமை நடந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…