உயிருள்ள நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரர்கள் – விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

Default Image

உயிருடன் இருந்த நாயை வண்டியின் பின்புறம் கட்டி இழுத்து சென்ற இருவர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இருசக்கர வாகனத்தில் நாயை கட்டியவாறு இரண்டு பேர் தரதரவென அப்படியே இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இந்நிலையில் இதுகுறித்து பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடியோவில் இருக்கும் வண்டி நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஹித்தேஸ் படேல் என்பவர் தான் இந்த நாயை வண்டியில் கட்டி இழுத்துச் சென்றவர் என்பதை கண்டறிந்து தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும், அவருடன் நடத்திய விசாரணையில் அவர் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் இருந்த அவரது நண்பர் தற்போது தலைமறைவாகி இருக்கும் நிலையில், அந்த நாய் உயிர் இழந்து விட்டது. அதனை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது பகிரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். ஆனால் வீடியோவை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் நாய் உயிருடன் இருப்பதை வீடியோவில் தெளிவாக பார்க்க முடிவதாகவும், அவர்கள் அந்த வீடியோவில் பேசும் பொழுது கூட நாய் இறந்ததாக கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹித்தேஸ் மற்றும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் நண்பர் மீது விலங்குகள் வதை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் சாலையில் இழுத்து சென்ற நாய் தற்பொழுது உயிர் இழந்து விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்