மும்பையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைங்களை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷபீர் மற்றும் சானியா கான் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர்.
போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர். தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர்.
தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..!
சம்பவம் குறித்து தம்பதியின் குடும்பத்தினர் அறிந்தவுடன், கதை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் மற்றும் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஷபீர்கான், அவரது மனைவி சானியா, உஷா ரத்தோர், ஷகீல் மக்ரானி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், அவர்களால் போதைப்பொருள் இல்லாமல் வாழ முடியாது. தம்பதியினர் தங்கள் மகனை ரூ.60,000 க்கு ஒரு நபருக்கு விற்றனர். குழந்தைகளை யாருக்கு விற்கப்பட்டது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும், இந்த தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையை, சிறுமியை குற்றம் சாட்டப்பட்ட ஷகீல் மக்ரானிக்கு கடந்த மாதம் ரூ.14,000-க்கு விற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…