கச்சா எண்ணெய் விலை குறைவு.! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா.?
கொரோனா பாதிப்பு காரணமாக உலக அளவில் பொருளாதார செயல்பாடுகள் நின்றுவிட்டது. இதனால் உற்பத்தியான கச்சா எண்ணெயை வாங்க நிறுவனங்கள் யாரும் முன்வரவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து அனைத்தும் முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசலின் தேவை பெருமளவு குறைந்துள்ளது. அதிலும், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக கச்சா எண்ணெய் பூஜ்ஜியம் டாலருக்கும் கீழ் சென்று உள்ளது. இங்கு பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நீடிப்பதால் போக்குவரத்தும் முடங்கி பெட்ரோல், டீசல் தேவை சரிந்துள்ளது.
இதனால் நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கச்சா எண்ணெயையை விலைக்கு வாங்க யாரும் தயாரில்லை, வர்த்தகத்தில் நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் -40.32 டாலர்கள் சரிவைச் சந்தித்தது. இந்த விலைச் சரிவால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை.