காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கங்கூ அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவில்லை.