அயோத்தி ஹனுமன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
உலக முழுவதும் உள்ள ராம பக்தர்கள் மட்டுமின்றி இந்துக்களுக்கு மறக்க முடியாத நாளாக நேற்றைய தினம் அமைந்தது. 500 ஆண்டுகள் கனவு நிறைவேறியுள்ளது என மக்கள் மகிச்சியில் உள்ளனர். வனவாசம் சென்ற ராமர் பல காலங்களுக்கு பிறகு மீண்டும் அயோத்திக்கு வந்துவிட்டார் என பக்தர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பிரதமர் மோடி, முக்கிய விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏரளாமானோர் நேற்று அயோத்தியில் ராமரை பார்க்க குவிந்தனர். அதன்படி, கோயில் கருவறையில் பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு, முதல் நபராக பிரதமர் மோடி வழிபட்டார். இதன்பின் பல்வேறு முக்கிய தலைவர்கள் ஸ்ரீ ராம பகவானுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
பெரும் சர்ச்சைக்கும், எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயிலில், இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வருகை புரிந்து, நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் தீபாவளி போல கொண்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா..!
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலை தொடர்ந்து, ஹனுமன் கோவிலில் (Hanuman Garhi Temple) பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது, இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஹனுமனை தரிசிக்க காத்திருக்கின்ற சூழல் உருவாகியுள்ளது. அயோத்தி நகரின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த ஹனுமன் கார்கி கோயிலில் பல ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இது ஹனுமனுக்கு பிரத்தேயகமாக கட்டப்பட்ட கோவிலாகும். அயோத்தியில் உள்ள 10 முக்கியமான கோவில்களில் ஹனுமன் கார்கியும் ஒன்று என கூறப்படுகிறது. அதாவது, இலங்கைக்கு சென்று ராவணனை வதம் செய்துவிட்டு அயோத்தி நகருக்கு ராமர் திரும்பினார். அப்போது தனது பக்தர் ஹனுமனுக்கு ஆகவே ஒரு இடம் அளித்து, தாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்று முதல் இன்று வரை அங்கேயே ஹனுமன் இருப்பதாக நம்பிக்கை இருந்து வருகிறது.
இந்த சூழலில் தான் ஹனுமன் கார்கி என்ற பெயரில் கோயிலை கட்டி எழுப்பினர். இங்கு ஹனுமன் குழந்தை வடிவில் இருப்பது போன்ற சிலை அமைந்துள்ளது. இந்த சூழல், நேற்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது தீவிர பக்தரான ஹனுமனையும் தரிசனம் செய்து வருகின்றனர். எனவே, அயோத்தி வரும் பக்தர்கள், அதே நகரத்தில் இருக்கும் ஹனுமனையும் தரிசிக்க குவிந்துள்ளனர்.