தற்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் சுயசரித புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அதில், 60 வயது நிறைவடைந்தவுடன் தானுக்கும், சிவனும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2018 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவராக AS கிரண் குமார் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய பெயரும், சிவன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இப்பதவியை நான் அடைவேன் என்று எதிர்பார்த்தாலும் அது நடக்கவில்லை.
இருப்பினும், சிவன் இஸ்ரோவின் தலைவரான பிறகும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டு விலகவில்லை. அந்த பதவி குறித்து சிவனிடம் கேட்டபோது சிவன் பதில் எதுவும் சொல்லாமல் தயங்கினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி என் சுரேஷின் தலையீட்டின் காரணமாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.
இஸ்ரோ தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு பதிலாக சிவன் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க முயன்றதாகவும் சோம்நாத் தனது சுயசரிதையில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சந்திராயன் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் மோடி வரவேற்க என்னை அழைத்து செல்லாமல் ஒதுக்கி வைத்தனர். தேவையான சோதனைகளை மேற்கொள்ளாமல் அவசரமாக ஏவப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் தோல்வியடைந்ததாகவும் அவர் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புத்தகத்தில் தனது கே.சிவனைப் பற்றிய சில விமர்சனக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனது வரவிருக்கும் சுயசரிதையை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்தார்.
முன்னாள் இஸ்ரோவின் தலைவர் சிவன் தலைவராக இருந்தபோது சந்திராயன் 2 திட்டமானது நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்டது. அதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நிலுவின் தரையைப் பரப்பில் மோதி திட்டம் தோல்வி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…