அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரைத் தாக்கியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கர்னல் விப்லவ் திரிபாதியின் மனைவியும் மகனும் கான்வாய் வாகனத்தில் இருந்தனர்.மாவட்டத்தில் ஒரு குடிமை நடவடிக்கை திட்டத்தை மேற்பார்வையிட சென்றபோது காலை 10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“மணிப்பூரின் சுராசந்த்பூரில் அசாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது நடந்த கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் CO 46 AR உட்பட 5 துணிச்சலான வீரர்களை நாடு இழந்துள்ளது.
உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள்.குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…