சிறையில் இருக்கும் குற்றவாளிகள் : குற்றவாளிகள் நாயை வளர்க்கும் காவல்துறையினர்!
கொலைக்கு குற்றத்திற்காக குடும்பமே சிறை சென்ற நிலையில், அவர்கள் வீட்டில் இருந்த நாயை காவலர்கள் காவல் நிலையத்தில் வைத்து வளர்த்து வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் அஹிர்வார் . இவரும் இவரது 2 மகன்களும் சேர்ந்து ஒரு குடும்பத்தில் வசிக்கும் 5 பேரை கொலை செய்துள்ளனர். இதில் 10 வயது சிறுவனும் ஒருவன். நிலத்தகராறில் குடும்பத்தையே கொலை செய்ததற்காக மனோகர் அஹிர்வார் மற்றும் அவரது மகன்களை காவலர்கள் கைது செய்தனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்த லேப்ரடார் வகை நாய் இருந்துள்ளது.
அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த நாயை வளர்க்க இல்லாமல் தனியாக இருந்துள்ளது. இதைக் கண்ட அந்த காவலர்கள் அந்த நாயையும் கூட்டி சென்று காவல் நிலையத்தில் வைத்து வளர்க்கின்றனர். அதற்கு தேவையான உணவு, இருப்பிடம் ஆகியவற்றையும் காவலர்களே ஏற்பாடு செய்துள்ளனர்.