பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்கவுன்ட்டர்..!
- கடந்த 27-ம் தேதி மருத்துவர் பிரியங்காவை நான்கு பேர்கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து ஒரு பாலத்திற்கு அடியில் தீ வைத்து எரித்து கொன்றனர்.
- பிரியங்காவை கொலை செய்த இடத்திற்கு போலீசார் குற்றவாளிகளை அழைத்து சென்றபோது அங்கு இருந்து நான்கு பேரும் தப்பி செல்ல முயன்றனர்.
- அப்போது போலீசார் தடுக்க முயற்சி செய்தனர்.ஆனால் போலீசாரையும் தாக்கி விட்டு ஓட முயற்சி செய்த போது போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.
ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.இவர் எப்போதும் வேலைக்கு சென்றாலும் டோல்கேட் வரை இருசக்கர வாகன வண்டியில் சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு பிறகு பேருந்து மூலம் கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
கடந்த 27-ம் தேதி மாலை 6 மணி அளவில் ஒரு அவசர வேலையாக டாக்டர் பிரியங்கா ரெட்டி டோல்கேட் சென்று தனது வண்டியை நிறுத்தியுள்ளார்.இதனை கண்காணித்த 4 பேர் கொண்ட கும்பல் பிரியங்கா மருத்துவமனைக்கு செல்வதை உறுதி செய்து. பிரியங்காவின் வண்டியை பஞ்சர் ஆக்கினார்.
பின்னர் பிரியங்காவின் வண்டியை பஞ்சர் பார்த்து தருவதாக கூறி லாரி டிரைவர் முகமது ஆஷா, சிவா, சின்ன கேசவலு, நவீன் ஆகியோர் பிரியங்காவை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர்.
இதையடுத்து பிரியங்காவின் உடலை தார்பாயில் சுருட்டி பெங்களூருவில் – ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு பாலத்திற்கு அடியில் சென்று தீ வைத்து எரித்து விட்டனர். பிரியங்காவின் ரெட்டி கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.
பிரியங்காவை கொலை செய்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நான்கு பேரை போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் பிரியங்காவை கொலை செய்த இடத்திற்கு போலீசார் குற்றவாளிகளை அழைத்து சென்றபோது அங்கு இருந்து நான்கு பேரும் தப்பி செல்ல முயன்றனர்.அப்போது போலீசார் தடுக்க முயற்சி செய்தனர்.ஆனால் போலீசாரையும் தாக்கி விட்டு ஓட முயற்சி செய்த போது போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.