கடந்தாண்டை விட நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு- ஹரியானா போலீசார்.!
கடந்தாண்டை விட நடப்பாண்டில் நாட்டின் பல இடங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது . கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது என்றும், பேருந்து, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் குறைத்தும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், குற்றங்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம் கடந்த 2019-ன் முதல் 6 மாதங்களை ஒப்பிடுகையில் இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டிலுள்ள பல இடங்களில் குற்ற சம்பவங்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 20.46% வரை குறைந்துள்ளதாக ஹரியானா போலீசார் கூறியுள்ளனர். மேலும் 18.18% கற்பழிப்பு வழக்குகளும், 27.14% கடத்தல் வழக்குகளும் வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.