இந்தியாவில் தற்போது சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இணையம் மூலம் நடந்த சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காரணமாக மக்களின் ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். எனவே டிஜிட்டல் பண வர்த்தகம் மூலம் தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்த சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் பரவாமல் தடுக்க தேசிய இணைய பாதுகாப்பு உத்தி 2020 என்ற புதிய திட்டத்தை அரசு துவங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நம்பகமான, பாதுகாப்பான இணைய வசதி உறுதி செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…