பெருகும் இணைய வழி பணப்புழக்கம்… சைபர் குற்றங்கள் அதிகரிப்பு… தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து…

Default Image

இந்தியாவில் தற்போது  சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இணையம் மூலம்  நடந்த சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காரணமாக மக்களின்  ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். எனவே டிஜிட்டல் பண வர்த்தகம் மூலம் தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்த சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் பரவாமல் தடுக்க தேசிய இணைய பாதுகாப்பு உத்தி  2020 என்ற புதிய திட்டத்தை  அரசு துவங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நம்பகமான, பாதுகாப்பான இணைய வசதி உறுதி செய்யப்பட உள்ளது என்று  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்