இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த டிச-30ஆம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பந்த்திற்கு நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கால்விரலில் காயம் மற்றும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரிஷப் பந்தின் காயங்கள் முழுமையாக குணமடைந்து அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரைச் பலர் சந்திக்க வருவதால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) இயக்குனர் ஷியாம் சர்மா, தொற்று பயம் காரணமாக அவரது குடும்பத்தினரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் தனி வார்டுக்கு மாற்றுமாறு கூறியிருந்தோம். அதன்படி, அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நன்றாக இருக்கிறார், விரைவில் குணமடைவார் என தெரிவித்துள்ளார்.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…