மும்பை : பிரபல தொழிலதிபரான அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் யார் யார் கலந்து கொண்டனர் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நேற்றைய நாள் பாந்த்ரா குர்லா சென்டரில் (பிகேசி) உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் மிகப்பிரண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு உலகெங்கிலும் உள்ள பல தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற இந்த திருமணத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி, இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பிர், சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், யுவேந்திர சகல், ஜஸ்பிரிட் பும்ரா, கே.எல்.ராகுல், அஜின்க்யா ரஹானே, ஹர்திக் பாண்டியா, குரனால் பாண்டியா, இஷான் கிஷான் என அவர் அவர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவரது மனைவி சாக்க்ஷி தோனி மற்றும் அவரது மகள் ஜிவா தோனியுடன் அம்பானி வீட்டின் திருமணத்திற்கு கலந்து கொண்டார். அவர் எடுத்து கொண்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதே போல் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பிர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கலந்து கொள்ளும் முதல் திருமணம் இது தான். அவர் அவரது மனைவிடையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் சிரிப்புடன் நிற்கும் கவுதம் கம்பீரின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
அதே போல ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, இஷான் கிஷான் என அனைவரின் புகைப்படங்களும் கிரிக்கெட் வட்டாரங்களில் இன்றைய பேசும் பொருளாகவே மாறியுள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…