வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!கன மழை வாய்ப்பு ..!இந்திய வானிலை மையம்..!
தென் மேற்கு ,மத்திய மேற்கு வங்க கடல் பகுதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. வட தமிழகம் , ஆந்திரா பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் , ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவு பெறுகிறது. தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமனை நோக்கி செல்ல வாய்ப்பு என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.