மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருத்தி பகுதியில் விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. விரைவுச்சாலை அமைக்கும் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் சரிந்து அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கிரேன் சரிந்து சரிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், விபத்தில் உயிரிழந்த 20 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியானது. அதன்படி, உயிரிழந்த 2 தமிழர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் ஆவார். அவர்கள் இருவரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…