மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்ததற்கு காரணம் நண்டுகள் என நீர் சேமிப்பு துறை அமைச்சர் தானாஜி கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி பலத்த மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்தது.அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் 7 கிராமங்களில் புகுந்தது. அதில் அங்கு இருந்த பல வீடுகள் தண்ணீரில் அடித்து சென்றது.
மேலும் தண்ணீரில் 24 பேர் அடித்து செல்லப்பட்டனர்.அதில் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில் அணை உடைவதற்க்கு காரணம் நண்டுகள் தான் என நீர் சேமிப்பு துறை அமைச்சர் சர் தானாஜி கூறியுள்ளார்.
இதை பற்றி செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் தானாஜி , ஏராளமான நண்டுகள் அணையின் கரையை வலுவிழக்க செய்து விட்டது என உள்ளூர் மக்கள் பல முறை கூறியுள்ளனர். அதற்க்கு அதிகாரிகள் சில நடவடிக்கையும் எடுத்தனர்.
மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் கூட உடைந்து இருக்கலாம். நீர் பிடிப்பு பகுதியில் 8 மணி நேரத்தில் 192 மி.மீ மழை பெய்தது.மேலும் 8 மணி நேரத்தில் 8 மீட்டர் நீர் உயர்ந்ததாகவும் தகவல் கிடைத்து உள்ளது என கூறினார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…