நாளை தூத்துக்குடி மீனவ குடும்பங்களை சந்திக்க போகும் கேரள முதல்வர் பினராயி விஜயன்….!

Default Image

ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது.

 

முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை:

இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM மாநிலசெயலாளர் G.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் அனைத்து உதவியும் கேரளா அரசு செய்யும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் K.S.அர்ச்சுனன தலைமையில் திருவனந்தபுரம் விரைந்தனர்.இவர்களுடன் Citu மாவட்டதலைவர் ரசல் (Rusel Retnam) Cpm மாநகரசெயலாளர் ராஜா   (Raja Priya), Sfi மாநகர தலைவர்  ஜாய்சன் (Joyson Sfi Joyson),விஜயகுமார் தீக்கதிர் ஆகியோருடன் மீனவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 16 பேரும் உடன் சென்றுள்ளனர். 

கேரளா அரசு அனைத்து உதவி செய்ய தயார்:

தூத்துக்குடி மீனவர் காலனியில் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு குளச்சல் பகுதி மீனவர்களுடன் கடலுக்கு சென்ற 6 பேரில் ஜெகன் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்: 2 பேர் இறந்தாக தகவல் வந்துள்ளது.இத்தகவல் வந்தவுடன் cpim தூத்துக்குடி மாவட்டசெயலாளர் அர்ச்சுனன் ,மாநகரசெயலாளர் ராஜா ,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் நேரடியாக சென்று குடும்பத்தினர் பார்த்தார்கள். பின்னர் தேவாலய ஆயர்(பாதர்) சென்று பார்த்தார்கள் அவர்கள் சில உதவிகள் கேட்டனர். உடலை பார்க்க சென்ற 16பேர் திருவனந்தபுரத்தில் தங்க இடம் இல்லாமல் உள்ளனர் என்றனர். உடனடியாக  மாவட்டசெயலாளர் அர்ச்சுனன் தெலைபேசியின் மூலமாக மாநில செயலாளர் G.ராமகிருஷ்னன் தொடர்புகொன்டு பேசினார்.இதனையடுத்து கேரளா சென்ற மீனவ குடும்பங்கள் சேர்ந்த அனைவரும் கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு அலுவலகத்தில் தங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையக செயலாளர் சஜிவன் உதவிகளை செய்தார்.இன்று திருவனந்தபுரத்திற்கு சென்று கேரள அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஷர்மத் M.S அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

நாளை காலை முதல்வருடன் சந்திப்பு:

நாளை காலை தூத்துக்குடி மாவட்ட CPM தலைவர்கள், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கேரள முதல்வரை சந்திக்கின்றனர்…..

இந்த நிகழ்வானது தமிழகத்தின் முதல்வர் யார் ???

முதல்வர் செய்ய வேண்டிய வேலைகள் தான் என்ன ???

என்ற கேள்வியை நமக்குள் விதைக்கிறது.

 

-மாறன்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்