இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய பொது செயலாளர் நியமனம்! தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக பணியாற்றிய எஸ்.சுதாகர் ரெட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆதலால் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.