yes வங்கியின் ரூ.3,642 கோடியை ஏப்பம்!விட்ட-காக்ஸ்? தலைமை அதிகாரி,ஆடிட்டர் அதிரடி கைது
யெஸ் வங்கியில் ரூ.3642 கோடி கடனை திருப்பி செலுத்தாதால் காக்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி,ஆடிட்டர் ஆகியோரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
யெஸ் வங்கியில் சுமார் 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் கடன் பெற்ற காக்ஸ் நிறுவனம் கடனைத் திரும்ப செலுத்தாமல் இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் யெஸ் வங்கியில் ரூ.3642 கோடி கடனை திருப்பி செலுத்தாதால் காக்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி அனில் கான்டேல்வால் மற்றும் அதன் ஆடிட்டர் நரேஷ் ஜெயின் இருவரையும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது.
சட்டவி ரோமாக பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தில் யெஸ் வங்கி ஊழல் தொடர்பாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்
கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.