கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பு இருக்கிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ கிடைக்கக்கூடும். ஆனால், தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பின்பு விற்பனைக்கு வரும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 2021 க்குள் இந்தியாவுக்கு 60-70 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, உரிமம் பெறுவதற்கு டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நேரம் தேவைப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, புனேவைச் சேர்ந்த மருந்து SII, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கட்டம் 2 மற்றும் 3 சோதனைகளை நடத்தி வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 700-800 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முடியும்.
இதற்கிடையில், மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் வளர்ச்சியின் மேம்பட்ட கட்டங்களில் உள்ளன. அவற்றில் 2 தடுப்பூசி இரண்டாம் கட்டத்திலும், ஒன்று மூன்றாம் கட்டத்திலும் உள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…