பசுக்களை பாதுகாக்க வேண்டும்.! மாட்டுச்சாணம் கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றும்.! குஜராத் நீதிமன்றம் கருத்து.!
பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றி குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குஜராத்தின் தபியில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சமீர் வியாஸ் பசு மாடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி கூறினார். அவர் கூறுகையில், “பசுவின் ரத்தம் பூமியில் சிந்தாத நாளில் பூமியின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று கூறினாலும் பசு பாதுகாப்பு பற்றி பேசினாலும் பசு வதை மற்றும் பசுக்களை சட்ட விரோதமாக கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன” என்று கூறினார்.
மேலும், “இது ஒரு நாகரிக சமுதாயத்திற்கு மிக பெரிய அவமானம்” என்று அவர் கூறினார். இந்தியாவில் 75 சதவீத பசுக்கள் ஏற்கனவே காணாமல் போய்விட்டதால் சட்டவிரோதமாக பசுக்கள் கடத்தப்படுவதும் வெட்டப்படுவதும் வேதனையளிக்கிறது என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதே போல் கடந்த நவம்பர் 2022-யில் அம்மாவட்ட நீதிபதி “மாட்டுச் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படாது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் “பசுவின் சிறுநீர் பல தீராத நோய்களை குணப்படுத்தும்” என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.