கொரோனா தொற்றிலிருந்து பசுக்களை பாதுகாக்க உத்திரப்பிரதேச அரசு,ஒவ்வொரு மாட்டத்திலும் பசு உதவி மையம் அமைக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பானது மிகவும் தீவிரமடைந்துள்ளது.இதனால்,நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெற முடியாமல் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிகின்றனர்.
இதனைத்தொடர்ந்து,உத்திரப் பிரதேசத்திலும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.இதனையடுத்து,இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சையளிக்க முடியாமல் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகள் திணறி வரும் இந்த நிலையில்,உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மாடுகளைப் பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது,மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்களைப் பாதுகாக்க உதவி மையங்கள் அமைக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.மேலும்,அனைத்து மாட்டு முகாம்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும்,மாடுகளுக்கு அடிக்கடி வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,முகாம்களில் பசுக்கள் மற்றும் பிற விலங்குகளுக்கான ஆக்சிமீட்டர்கள் மற்றும் வெப்ப ஸ்கேனர்கள் போன்ற அனைத்து மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்படவுள்ளன.மேலும்,ஆதரவற்ற பசுக்கள் தங்குவதற்காக முகாம்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கும் நடவடிக்கையை முதல்வர் யோகி அரசு மேற்கொண்டு வருகிறது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…