மாட்டு சாணம் அல்லது சிறுநீர் கொரோனாவிற்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது…! – இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர்
மாட்டு சாணம் அல்லது சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் இல்லாத காரணத்தினால் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சிலர் வாரத்திற்கு ஒருமுறை, மாட்டு முகாம்களுக்கு சென்று தங்கள் உடல்களை மாட்டு சாணம் மற்றும் சிறுநீரில் முழுவதுமாக நனைத்து கொள்கின்றன. இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அல்லதுகொரோனா வைரசில் இருந்து மீட்க உதவும் என நம்புகின்றனர் .
இந்து மதத்தில் மாடு என்பது வாழ்க்கை மற்றும் ஒரு பூமியின் புனிதமான அடையாளமாகும். இந்துக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வதற்கும், மாட்டு சாணத்தை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் மாட்டு சாணத்தில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளது என நம்புகின்றனர்.
மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாட்டுச் சாணம் அல்லது அதன் சிறுநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது, ஒரு தவறான கருது, மேலும் பல மேலும், இது சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜே.ஆர்.ஜெயலால் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராக நோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மாட்டு சாணம் அல்லது சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. இது முழுவதுமாக மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வேறு சில உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.