பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் – மத்தியப் பிரதேச முதல்வர்!
பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் சார்பில் மகளிரணி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர் நாட்டில் பசுக்கள் மற்றும் மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. எனவே அவை மிகவும் முக்கியமானவை என தெரிவித்துள்ளார். மேலும் பசுக்கள், அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை ஒரு தனிநபரின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த உதவும் என குறிப்பிட்டுள்ளார்.