கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிப்பு.
கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதனை சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மற்றொரு மைல்கல். கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை W.H.O. அவசரகால பயன்பாட்டிற்கு அங்கரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கோவோவாக்ஸின் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை காட்டுகிறது என்றும் சிறந்த ஒத்துழைப்புக்கு அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் கோவோவேக்ஸ் என பெயரிடப்பட்டு சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக சீரம் நிறுவனத்துடன் நோவாவேக்ஸ் கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…