மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவிஷீல்ட் எனும் கொரானா தடுப்பூசியும் மும்முரமாக தன்னார்வலர்களை வைத்து பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் வருகின்ற மருத்துவமனையில் வருகிற வாரத்தில் மூன்று தன்னார்வலர்கள் ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்ட் எனும் தடுப்பூசியின் முதல் டோசை பெற உள்ளனர்.
தற்பொழுது இந்த மூன்று பேர் யார் என்பதற்கான தேர்வுகள் நடைபெற்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டேஸ் வழங்கப்பட்ட பிறகு 2 மணி நேரம் தன்னார்வலர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வருகிறதா என்பதையும் சோதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.