கொவைட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 2,570 கோடி ஒதுக்கீடு செய்தார் மத்திய நிதியமைச்சர்…

Default Image

உலகில்  கொவைட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை  தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொவைட்-19  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் எதிரொலியாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படை சேவைகளை வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதில்

  • நகர பகுதிகளுக்கு ரூ.1,629 கோடியும்,
  • ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாநிலங்களின் வாரியாக, தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து, ஆந்திராவிற்கு முதல் தவணையாக ரூ.431 கோடி மற்றும் 2 வது தவணையாக ரூ. 870.2363 கோடி நிதியும் ,
  • ஒடிசாவிற்கு முதல் தவணையாக ரூ.186.58 கோடி நிதியும் ,
  • மேகாலயா மற்றும் நாகலாந்துக்கு 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான நிதியாக முதல் தவணையில் முறையே ரூ.1.515 கோடி மற்றும் ரூ.6.115 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • மேலும் அருணாச்சல பிரதேசத்திற்கு முதல் தவணையாக ரூ.16.215 கோடியும்,
  • 2வது தவணையாக
    ரூ.70.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • இந்த கொவைட்-19 தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்து ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்