காவு வாங்க தொடங்கியது கோவிட்-19… இந்தியாவில் இரண்டாவது உயிரை காவு வாங்கியது…

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே, கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். இவருக்கு கோவிட்-19 தொற்று பாதித்தது. இந்நிலையில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்தவர் அண்மையில் ஜப்பான், ஜெனீவா, இத்தாலிக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அவர் மூலம் 69 வயதான அவ
ரது தாயாருக்கும் இந்த காய்ச்சல் பரவியது. இருவரும் டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 69 வயதான தாய் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கோவிட்-19 காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.