குட் நியூஸ்…!”கோவிஷீல்டு தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி 10 மடங்கு அதிகரிக்கும்” – ஆய்வு முடிவு..!

Default Image
  • கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டானது,கோவாக்சின் தடுப்பூசியை விட 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
  • மருத்துவர்களிடையே நடத்திய ஆய்வு முடிவு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி,இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும்,பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டானது,கோவாக்சின் தடுப்பூசியை விட 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக மருத்துவர்களிடையே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது,நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 515 மருத்துவர்களிடம்,நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது.

அவ்வாறு நடத்திய ஆய்வில்,ஒரு மருத்துவருக்கு கூட பெரிய அளவில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளின் இரண்டு தவணைக்குப் பிறகு,அவர்களின் உடலில் 95 சதவீதம் செரோபோசிட்டிவிட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

செரோபோசிட்டிவிட்டி என்பது உடலில் உள்ள ஆன்டிபாடிகளின்(நோய் எதிர்ப்பு சக்தி) உற்பத்தியைக் குறிக்கிறது, மேலும் டைட்ரே உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளின் அளவைக் குறிக்கிறது.

மேலும்,கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளன என்றும்,அதில்,கோவிஷீல்டு தடுப்பூசி அதிக அளவில் நோய் எதிர்ப்பு செல்களை உருவாகியுள்ளது என்றும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது,முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில், கோவாக்சினை செலுத்திக் கொண்டவரை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் உடலில் 10 மடங்கு அதிக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகியிருப்பது,மருத்துவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து,இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில்,கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் உடலில் 6 மடங்கு அதிகமாக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,இதுகுறித்து,இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், கொல்கத்தாவின் ஜி.டி. மருத்துவமனை மற்றும் நீரிழிவு நிறுவனத்தின் ஆலோசகர் உட்சுரப்பியல் நிபுணருமான அவதேஷ் குமார் சிங் கூறுகையில்,

  • “கோவிஷீல்டு தடுப்பூசியானது அதிக எதிர்ப்பு ஸ்பைக் ஆன்டிபாடிகள் மற்றும் அதிக செரோபோசிட்டிவிட்டி வீதத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
  • தற்போது 3 வது கட்ட சோதனை முடிவு இல்லாத நிலையில்,இரண்டு தவணைகளுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசியும் நல்ல பாதுகாப்பு ஆன்டிபாடிகளைத் தூண்டுகிறது என்பதைக் காட்ட சில உண்மையான உலகளவிலான ஆதாரங்களையும் நாங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்