#Viral:ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன் தன்னம்பிக்கையின் உச்சம்
ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன்.
இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏறப்படுத்தியுள்ளது, இதன்விளைவாக இந்தியா முழுவதும் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது, இப்பபடிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் தொடர்ந்து தேர்விற்காக படித்து வருகின்றனர்.
ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் அச்சூழலிலும் சிஏ பட்டய கணக்காளர் தேர்விற்கு தொடர்ந்து படிக்கும் ஒரு புகைப்படம் சமூக வளைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மேலும்,ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் குலன்ஞ், கன்ஞ்சம் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் அன்மையில் மருத்துவமனைக்கு சென்றபோது அந்த மாணவன் புத்தகத்துடன் அமர்ந்து தேர்விற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டியுள்ளனர்.
கன்ஞ்சம் கலெக்டர் விஜய் குலன்ஞ் தனது ட்விட்டரில் இந்த புகைப்படத்தை பதிவேற்றி அதனுடன் “வெற்றி தற்செயல் அல்ல, அதற்கு அர்ப்பணிப்பு தேவை” என்று பதிவிட்டுள்ளார், மேலும் ‘உங்களின் அர்ப்பணிப்பானது உங்களுடைய அனைத்து வலிகளையும் மறக்கச் செய்யும் என்றும் அதன்பிறகு இவ்வெற்றியானது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.
Success is not coincidence. You need dedication. I visited Covid hospital & found this guy doing study of CA exam. Your dedication makes you forget your pain. After that Success is only formality. pic.twitter.com/vbIqcoAyRH
— Vijay IAS (@Vijaykulange) April 28, 2021