ரைச்சூரில் அமைந்துள்ள கொரோனா நோயாளிகளுக்கான OPEC மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இணைந்து ‘ButtaBomma’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகின்றனர். குடும்பத்தையும் மறந்து பொது மக்களுக்காக உழைக்கும் டாக்டர்கள் பலர் தங்களது மன அழுத்தத்தை மாற்ற நடனமாடியும், பாடல்கள் பாடியும் வருகின்றனர். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் வழக்கம்.
அந்த வகையில் தற்போது கர்நாடகாவில் உள்ள ரைச்சூரில் அமைந்துள்ள OPEC மருத்துவமனை என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (RGSH) தற்போது கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் சில மருத்துவ ஊழியர்கள் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு அல்லு அர்ஜுனின் ‘ButtaBomma’ பாடலுக்கு நடனமாடி கலக்குகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…