கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் – முதல்வர் பினராயி விஜயன்  

Default Image

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் 59,690 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. 5,949 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

அதேநேரத்தில், மாநிலத்தில் இதுவரை 6,01,861 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, 60,029 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்[பாத்து குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது இது மூன்றாவது மாநிலமாக கேரளா திகழ்கிறது.

இந்த தடுப்பூசி தயாரானதும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதேபோல், மத்திய பிரதேசமும் அக்டோபர் இறுதியில் இலவச தடுப்பூசி அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்