குஜராத்தில் 9 மாதங்களுக்கு பின் பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறப்பு.!
குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கான கல்லூரிகள் குஜராத்தில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம், மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நுழையும் அனைவருக்கும் சோதனை செய்யப்படுகிறது என்று மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.